புதன், 14 மார்ச், 2012

கதைசொல்லி


                    கதைசொல்லி
இங்கே நடக்கும் சின்ன சின்ன விடயங்கள் கூட ஊரைத்தான் ஞாகப்படுத்துகின்றது.முக்கியமாக கதையாடல் அல்லது கதைசொல்லி என்று இன்றைய இலக்கியத்தில்   பெரிய பெரிய வார்த்தைகளால் சொல்லப்படுவதை எங்க ஊரில் மிகச் சாதரணமாக கையள்வார்கள்.
லோகநாதன் நடராஜ (Loganathan Nadaraiah) என்று பேஸ்ப்புக்கில்  இருக்கும் அவருடைய தந்தை ஒரு கதை சொல்லி.சின்ன பையன்கள் அவரை சுற்றி எப்பவும் இருப்பார்கள்.அவர் முதலாவதாக செய்வது ஊரிலை இருக்கிற எதோ ஏதோ இலைகளை எல்லாம் கிள்ளி வந்து கூழ் காச்சுவார்.அப்பவே அவரைச் சுற்றி நாங்கள் இருந்துவிடுவோம்.அவர் உடல் முழுக்க கதைகளால் பின்னப்பட்வர் போல கதை சொல்வார்.
“
இளவரசன் கையில் ஒரு முடி மட்டும் கிடைத்தது.அந்த முடியை வைத்து அந்த பெண் எப்படி இருப்பாள் என்று அவன் கற்பனையில் உலாவினன்.இவன் காதல் வலியை உணர்ந்த இவன் நண்பன் அந்த நாட்டின் மிகப் பிரபல்மான சித்திரக்காரனிம் இளவரசனை அழைத்துச் சென்றான்.சித்திரக்hரன் இந்த முடியைப் பார்த்து இவள் ஓர் பேரழகி தான் ஆனால் இவளை நான் வரைய வேண்டும் என்றால் ஏதோ தேசத்தில் உள்ள இரண்டு கொம்புள்ள ஆட்டில் பால் கொண்டு வரவேண்டும்…..”என நீளும் கதை எந்த இடத்திலிம்  சலிக்காமல் நிறைய மர்ம முடிச்சுகளோடு அலையும். எந்த கதையையும் அவர் ஓரே நாளில் முடித்தது இல்லை.அது அடுத்தடுத்து சந்திப்புகளிளோ அல்லது அந்த சந்திப்பு நடைபெற பட்சத்தில் அந்த கதை முடிவற்றதாகவோ அமைந்து விடும். இவருக்கு எந்த பெரியவர்களோடும் அவர்களடைய கருத்துக்களோடும் உடன் பாடு இல்லை.நாலு வயதில் இருந்து எட்டு ஒன்பது வயதுடையவரகளோடுதான் இவர் பேசுவார்.பேசுவது என்பதை விட கதைசொல்லியாகவே வாழ்க்iயை கடத்தினார்.
 
                     
அடுத்த கதை சொல்லியாக சுருளியப்பாவை கூறலாம்.இவருடைய கதைகள் ஒரு மார்க்கமானது.
    “
எடேய் உதிலை போறலே பொட்டை பார்த்தியே கழுத்திலே ஒரு மச்சம் இருக்கு…கட்டினால் இவளைத்தான்ட கட்டனும் காலுக்குள்ளேயே கிடப்பாளடா…”என்று ஆரம்பிச்சு எந்த மச்சம் உள்ளவங்க எந்த குணமுடையவர்கள் என்று சொல்லத் தொடங்கின நாங்கள் எல்லம் கிறங்கிப்போய் கிடப்போம்.
         
உண்மையா? பொய்யா? சரிய ?தப்பா?என்பது எல்லாம் தெரியாது…ஆனல் அவர் கதை சொல்லத் தொடங்கினால் அன்டைக்கு பூர கேட்டுகொண்டே இருக்கலாம்.எப்பவுமே பாலியல் சம்பந்தமாக தான் அவர் பேச்சு இருக்கும்.
உண்மையாக சொல்லப்போனல் அவர் எங்களுக்கு சொன்ன விடங்களை இதிலே சொன்ன எந்த தாய் தகப்பனும் தன்னுடைய பிள்ளைகளை என்னுடைய சைட்டை எட்டிப்பார்க்கவே விடமாட்டார்கள்.
ஆவர் சொன்ன ஒரு மேட்டர் சமிப காலத்தில் ஒரு சினிமா படத்தில் கூட வந்தது.அதற்க்கு பிறகுதான் சுறுளியப்பா ஒரு சீனியர் என்று நாங்க ஏற்றுக்கொண்டோம்.அதவது
“
ஒரு பெண்ணுக்கு கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரல் கட்டை விரலை விட பெரிதாக இருந்தால் அந்த பெண்ணை எந்த ஆணாலும் அடக்க முடியாது” என்ற மிகப் பெரிய விசயத்தை சுறுயளியப்பா எங்களுக்கு பண்ணிரண்டு பதின்மூன்று வயதிலேயே சொல்லித் தந்துவிட்டார்.அங்க சாஸ்த்திரம் மட்டும் அல்ல பெண்களின் நடை,அவர்களின் குரல்,அவர்களின் தலை முடி நீளம் எல்லத்துக்கும் ஒரு வியக்கினம் அவர் சொல்லுவார்.நடைமுறை வாழ்க்கைiயில் ஒரு கற்பனை மாய உலகத்தில் எங்களை தவிக்க விடாமல் சகலதையும் புட்டு     புட்டு வைத்து மேலும் எங்களை குழப்பத்தில் ஆற்றிய பெருமை சுருளியப்பவை சேரும்
புராணக்கதைகளில் வேறு வேறு கிளைக்கதைகளை அறிமுகப்படுத்தியவர்களில் கிளர்க்கர் ஐயா  உடைய  பொறுப்பு மிக முக்கியமானது. இன்றை வரைக்கும் கேட்காத பல புராணக்கதைகளை கிளார்கர் ஐயா எங்களுக்கு சொல்லி இருக்கிறார்
“
விசத்தை சிவன் தொண்டையில் இறக்கும் போது உமாதேவி தொண்டையை பிடித்து சிவனை நீலகண்டன் ஆக்கியதும்.சிவனின் வயிற்றில் விசம் இறங்க முடியாமல் தடுத்த கோபத்தில் விசமானது உமாதேவியை பழிவாங்க மெல்ல சிவனின் தலையில் உள்ள பாம்பிடம் சென்றதாகவும்.பாம்பும் விசமும் திட்டமிட்டு சிறிதளவு விசம் உமாதேவியின் கருவறைக்கு பக்கத்தில் உறைந்து இருப்பதாகவும்..எப்ப உமாதேவி தன் வயிற்றின் மூலம் குழந்தை பெறுகின்றாளோ…அன்று அந்த உதிரத்தோடு விசம் மழையாக பெய்து இந்த பூமியை அழித்து விடும் எனவும் அவர் கூறினார்.இந்த கதையை இது வரை யாரும் சொன்தாகவோ இல்லது வேறு புத்தகத்திலோ நான் கேட்கவில்லை.அதை விட முருகனும்,பிள்iயாரும் உமாதேவியரின் வயற்றில் பிறக்காத பிள்ளைகள் என்பது புராணக் குறியீடு.
நிறைய புராணக்கதைகளை புராணக் கிளைக் கதைகளை சொல்லியுள்;ளார்.அதில் பல கதைகள் நான் இதுவரை கேள்விப்hடாத கதைகளாகவே இருக்கின்றது.
கதை சொல்லிகள் கொஞ்சம் கற்பனை கலந்து சொல்வது தவிர்க்க முடியாத ஒன்று.கற்பனைக்கும் பொய்க்கும் கிட்டத்தட்ட ஆறு வித்தியாசமாவது இருக்கும்.பொய்யையே ஒரு கற்பனை மாதிரி சொல்பவரில் ஒருவரை நான் நெடுங்கேணியில் கண்டேன்.சின்னையாண்யை என்று சொல்பார்கள்
“
தம்பி அந்த எறுமை என்னை கலைக்குது நானும் ஓடுறேன்..ஓடுறேன் அதுவும் விடுறாதாக இல்லை.ஒரு கருத்த ஒரு பெரிய எருமை..அதுன்ரை கொம்பு இருக்கே இந்த தொடையளவு.சரியாய் கலைச்சு போனேன்.ஒரு பாலை மரத்துக்கு பாக்கத்திலே நிக்கிறேன் எருமை வந்து ஒரு முட்டு முட்டிச்சுது நான் அங்காலை பாய்ச்யசுட்டேன்.கொம்பு பாலைமரத்தை துளைச்சு அந்தபக்கம் வந்துச்சுது.இரண்டு கொம்பிலும் இரண்டு நட்டை எடுத்து பூட்டிவிட்டு நான் வந்துட்டேன்.”
முகமெல்லாம் வேர்த்து,கை எல்லாம் நடுங்கிய படி அவர் கதை சொல்லும் போது..எந்த விண்ணாதி விண்ணாலும் நீங்கள பொய் சொல்லுறிங்கள் என அவர் முகத்துக்கு நேராக மறுக்க முடியாது.அவருடைய கதை தன் வேட்டையாடலிலும்,தன் தனி மனத சாகஸங்களையும் சுற்றியே இருக்கும்.
மலேசியவில் நான் ஒரு 72 வயது முதியவரை சந்தித்தேன்.மாலை நேரங்களில் பூச்சோங் பார்கில் சதுரங்கம் விளையாடுவதை நாமிருவரும் ஒரு வழக்கமாக கொண்டிருந்தோம்.மலாய்,சைனிஸ்,தழிழ் மூன்று மொழிகள் மட்டும் அல்ல மலேசியாவின் பக்கத்து நாடுகளான பல மொழிகளை அறிந்து வைத்திருந்தார்.
அவர் தான் பழைய பிரிட்டிஸ் ராணுவ சிப்பாய் எனவும்.யாப்பனுக்கு எதிரான யுத்தத்தில் பங்கு பற்றியவராகவும் கூறினார்.அவுஸ்ரேலியாவுக்கும்,வியட்நாமுக்கும் இடையில் சிறிய பல தீவுகள் இருப்பதாகவும் இந்திய சுதந்திர வீரர்கள் பலர் அங்கே நிறைய பேர் கைதிகளாக இருந்தாகவும்..பல சித்திரவதைக்கு உட்பட்டு இறந்து விட்;டதாகவும்..இன்னும் பலர் பிஐp தீவு மற்றும் அவுஸ்ரேலியா,வியடநாம்,மலேசிய போன்ற பகுதியில் அடையாளம் மறைத்து வசிக்கிறாhர் எனவும்.பல இந்திய கைதிகள் தம் குடும்பத்துக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சின்ன குறிப்புக்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.அன்றைக்கு எனக்கு இருந்த மனநிலையில் எதையும் நான் பெரிசாக கிரகிக்க இல்லை.விளையாட்டின் முடிவில் வெற்றியோ தோல்வியோ அவர் எனக்காக ஐந்து ரிங்கிட் பணம் தருவர் அதற்காகவே அவரோடு நான் சதுரங்கம் விiயாடினேன் மேலும் அவரோடு பேச்சையும் தொடரந்தேன்.அந்த கதை சொல்லினுடைய தொடர்பு ஒரு கட்டத்தில் நின்று விட்டது. அவருக்கு சொல்லாமலே நான் இன்னொரு நாட்டுக்கு போய் விட்டேன்.அந்த காலத்தில் எம் நடை முறை வாழ்க்கையை எங்க ஏnஐயண்டு தானே தீர்மானித்தான்
நிலையற்ற இருப்பிடமும்..நிலையற்ற மனித உறவுகளும் கொண்ட இவ் வாழ்க்கையில்
நாங்களும் ஒரு கதை சொல்லிதான்
 

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

வார்த்தைகள்


        இண்டைக்கு நிறைய வார்த்தைகள் ஏனோ நாகரியம் இல்லை என்று இல்லாமல் போய்விட்டது.அந்த வார்த்தைகளை யாரவது எப்போதவது சொல்லும் போது ஒரு புதுச்சொந்தமும் மரியாதையும் அவர்களுக்குள் இடையில் ஏற்ப்படுகின்றது.எப்பவும் எங்களில் இருந்து தவறிய அந்த வார்த்தைகள் இப்பவும் எங்கள் உடம்பின் ஓரத்தில் ஒளிச்சுக்கொண்டுதூன் இருக்கின்றது.
                                                துரைமாமாக்கு எப்பவும் நாங்கள் வீட்டை போனால் ஏகப்பட்ட குஷி.எதை எமக்கு தரலாம் என வீடு புள்ளாக அலைவார்.கடைசியல் கை மடிப்பிக்குள்ளே இருந்து கிளியப்போற இரண்டு ரூபாய் நோட்டைத் தூக்கித் தருவார்.வள்ளியாச்சி கிளம்ப போற எங்களை எடேய் எப்பனாய் சாப்பிட்டுப் போட என்பா.துரைமாமா குழம்பிடுவார்
என்ன எப்பன்..?உனக்கு பிள்ளைக்கு சாப்பிடு குடுக்க விருப்பம் இல்லை அதுதான் எப்பனாய் சாப்பிடு என்கிறாய் என்று சத்தம் போடத்தொடங்கி விடுவார்
 எணேய் சும்மா சத்தம் போடதணை என்கிற வள்ளியாச்சி தாற சாப்பாடு சப்பிட்டு முடிய எங்களுக்கு
கண் பிதுங்கி விடும்
இந்த எப்பன் என்ற வார்த்தையை எங்க ஊர்ச்சனம் பாவிப்பது எப்பவுமே அதிகமாக சாப்பாட்டு விசயத்தில் தான்
ஒரு நாள் ரூபண்ணவும் குமார் அண்ணாவும் திடும் திடுமென புவனமக்கா வீட்டை போய்விட்டாங்கள்.எல்லோரும் வேலைக்கு போட்டீனம்.அன்னையாச்சி மட்டும் இருந்தாங்க.புவனமக்கா வீட்டை அன்னமுன்ன பழமரம் இருக்கு முதல் நாள் தான் இருவரும் அதிலே பழம் களவாடினவர்கள்.அதை தேவியக்கா ராசுமாமியிட்டை சொல்லி ராசுமாமி நல்ல அடி ரூபண்ணாவுக்கு.அந்த கோபத்தில் போன இரண்டு பேரும் கொடியிலை காய்ச்சு கொண்டிருந்த அன்னையாச்சியின் சாறியை எடுத்து கிளிச்சுக்கொண்டிருச்தாங்கள் அன்னையாச்சி கண்டு வெல வெலத்துப் போனங்கள்
ஏடேய் மோனே உதை எண்ட கிளிக்கிறிங்கள் என்று அழாக்குறையாக கேட்க
கந்தையாண்ரை பொடியனும்,வசந்தவின்ரை பொடியனும் தான் கிளிச்சது என்று உன்ரை பேத்திக்கு சொல்லுங்க என்று வந்துட்டங்கள்.அதற்க்கு பிறகு கொஞ்சக்காலம் இவையள் இரண்டு பேரும் வீரமனை ரவுடியாக உலவியது தனிக்கதை.
பிறகு ஒரு சத்தர்ப்பத்தில் ரூபண்ணாவை நான் இதைப்பற்றி கேட்கும் போது
அன்ணையாச்சி எடேய் மோனே எனக் கூப்பிட்டது இன்றைக்கும் கண்ணுக்குள் ஆடுகிறது என்றார்
அது சரியான பிழையான வேலை என கூறிக்கொண்டார்
மோனே என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரு மலையாள வார்த்தை போல இருந்தாலும் எப்படி எங்கள் மண்ணில் உலவியது எனப் புரியவில்லை.மிகவும் அழகாக அன்பையும்,ஆதங்கத்தையும் இவ் வார்த்தை கொண்டு வரும்.இப்ப இந்த வார்த்தையை பாவிப்பவர் இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது.
குறுக்கால போவன்,கட்டையில் போவன் என்ற வார்த்தையை பெறுப்பாலும் இந்த வார்த்தையை பொயிலை பேரம் முடிந்து போனப்போல பேசுவார்கள்.
குறுக்காலை போவன் இவ்வளவு செலவளித்து விட்டு இருக்கின்றோம் நோவமல் 5000 ரூபாய் கேட்டு போறான்.
கோழித்திருட்டுக்கு பேசுற வார்த்தை கட்டையில் போவன்.நாங்கள் அந்த பக்கத்தில் போகும் போதுதான் பேசுவார்கள்.பேசுறவங்களுக்கு பக்கத்தில் ஐயா பொடியண்ணா சில வேளை நின்று ஓமணை ஓமணை என்று சொல்லிக்கொண்டு நிற்ப்பார் எங்கடை வெள்ளாந்தி சனத்துக்க தெரியாது எங்கன்ரை கோழித்திருட்டுக்கு லீடரே ஐயப்பொடிண்ணா தான்.
ஆச்சிக்கு எப்பவும் ஒரு பழக்கம் இருக்கு உண்ணானை என்று அவங்க சத்தியம் பண்ணினால் அவங்க அந்த சத்தியத்தை மீற மாட்டங்கள்.நான் உண்ணானை என்று ஆச்சியிடம் சத்தியம் கேட்டுவிட்டால்
ஆதைப்பற்றி பிறகு கவலைப்படுவது இல்லை.இன்னைக்கும் உண்ணானை என்று யாரவது சொன்னால்.ஏதோ அவர்கள் உண்மைதான் சொல்லுறார் என முடிவு எடுத்து விடுவேன்
 
சாதரணமாக எங்க ஊரிலே எந்த நடிகரின் பெயரையும் சரியாக உச்சரித்தது இல்லை.
எம்சியார்,சிவாசி,விசயகாந்து,ரசனிக்காந்து,சத்தயராசு,கமலூ(உ),கடைசியாய் விசய் அது வரைக்கும் அந்த நாட்டில் தான் இருந்தேன்.இப்ப எப்படி என்று தெரியவில்லை அசித்து என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.சாதரணமாகவே ஊரில் சொல்லும் வார்த்தைகள் மிக நெருக்கமாக இதயத்துக்கு பக்கத்தில் இருந்து சொல்வது போல இருக்கும்.நிறைய வார்த்தைகள் இப்படி காணமல் போய்விட்டது வார்த்தை மட்டும் அல்ல பொருட்களும் தான் உதாரணத்துக்கு மூக்கூப்பேணி.
                                எங்கேயாவது இருந்தால் எடுத்து எனக்கும் தாருங்கள்
(ஊண்ணானை-எப்பனாக –குறுக்காலை போவன்-உன்ரை விசர்க்கதை-வடிவான பொட்டை-என்ரை ராசா-முசுப்பாத்தி-ஐசே-நடுச்சென்றரில்-உங்காலை-படுவராஸ்கல்-எடே மோனே-அங்கலை-கக்கூஸ்-கட்டையில போவான்-தேத்தண்ணி-முக்கூப்போணி-பொட்டை- சினேதப்பொடியன-ரசனி-சிவசிகனேசன்-எம்சியார்-விசியகாந்து-திண்ணடா-பேந்து………)