வியாழன், 27 ஜூன், 2013

யட்டி இன்றியமையாத ஒன்று ஒன்று



குழந்தைகள் அற்புதமானவர்கள் ,என் கணிப்பின் படி குழந்தைகளை அழகுபடுத்த  உடுப்பு எனும் வஸ்து தேவையில்லை,அழுக்கு கூட குழந்தைகளுக்கு  அழகுதான்.உடை குழந்தைகளை அழகு படுத்துகிறாதா?அசிங்கப்படுத்துகிறதா?,நீண்டகாலமாக என்னால் விடை காண  முடியாத கேள்வி இது ,அழகாக இருப்பதற்கு குழந்தைகள் உடை அணிய வேண்டுமா என்ன..? 

எனது இரண்டு வயதுக் குழந்தைக்கு தேவையான உடையை எனக்கு தெரிந்த ஒரு கடையில் எடுத்தேன் .ஆண் குழந்தை.கடைக்காரன் ஆண் பெண் பாரபட்சமின்றி  அனைத்து குழந்தைகள் அணியும்  உடைகளையும்  என் முன்னால் பரப்பி வைத்தான்.மலர்குவியல்,பிணக்குவியல்  என்பது போல உடைக்குவியல் ,எப்பிடியும் துணி எடுப்பான் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் ஒருவன் 100 துணிகளை எடுத்து வைத்தால் துணி எடுக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயம் உங்களுக்கு வருவது போல இருக்கும் ,எனக்கும் வந்தது , என்னை நம்பி இவ்வளவையும் கொட்டி விட்டானே எடுக்காவிட்டால் என்ன  நினைப்பான் என்ற சங்கடத்திலேயே  கொஞ்சம் அதிகமாகவே எடுத்து விட்டேன்..போதும் என்ற மனதே பொன் செய்யும் மருந்து என முன்னோர்கள் சொன்னது எனக்கு நினைவில் இருந்தது மகனுக்கு இல்லை ,சிறுவன் தானே இன்னும் கொஞ்சம் எடுங்கோ அப்பா என்றான் ராகமாக .[இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன என்ற மரியான் பாடல் ராகத்தில் ]


யட்டி எடுங்கோ நல்ல பிரண்ட் எல்லாம் இருக்கு என்று சொன்னார் கடைக்காரர்.இன்று  எனக்கென எந்த உடுப்பும் எடுக்கிற ஜடியாவும்  எனக்கு இல்லை,குறிப்பாக ஜட்டி எடுக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லையட்டி யில் பிராண்ட் போட வேண்டிய தேவை ஏன் வந்தது என நான் யோசிக்கும் போதே என் முன்னால் கலர் கலராக விதம் விதமாக பல பல வண்ணத்தில் யட்டிகளை கொட்டினார் கடைக்காரர்.

எல்லாம் சின்னப்பிள்ளளைகள் யட்டிகள்.சப்பென்று போய் போய்விட்டது எனக்கு மூக்குடைவில் இது கொஞ்சம் ஆழாமான உடைவு

இனிமேல் யட்டி போட்டு வருபவர்களை தான் விளையாடவிடுவேன் என்று ரூபண்ணா சொன்ன கணம் எனக்கு இருந்த உணர்வை சரியாக சொல்வதானால் திகைப்பு என்ற வார்த்தைப் பயன்படுத்த வேண்டும்,ரூபண்ணா எல் படிக்கிறார் ,எமது உதைபந்தாட்ட அணிக்கு அவர்தான் லீடர் ,கோச் எல்லாமே

அப்போது எனக்கு பண்ணிரண்டு சொச்ச வயது இருக்கும்.
யட்டி ஏன் பொடுகிறோம் என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை நானும் கேட்பதில்லை

எங்களுக்கு முன்னால் அப்பா யட்டி போடுவது இல்லை[அப்பா ஜட்டியே போடுவது இல்லை என அர்த்தம் கொள்ளக் கூடாது ]
அப்பாவின் யட்டி எப்பேதாவது கொடியில் காயும் போது கண்டு இருக்கிறேன்.

அதையும் இன்னொர துணியால் மறைத்து தான் வைத்திருப்பார்.
அம்மாவும் அப்பாவின் யட்டியை ஒளித்துதான் தோய்ப்பார்.
எப்போதோ ஒருநாள் அப்பாவின் யட்டி அக்காவின் யட்டியோடு இருந்தது.அக்கா அதை ஒரு கரப்பாண் பூச்சியை அல்லது விஷ ஜந்தை அப்புறப்படுத்துவது போல தும்புப்தடியின் நுனியில் எடுத்து அப்பாவின் உடுப்போடு போட்டாள் போட்டது மாத்திரமல்ல மறக்காமல் அதற்க்கு மேலே ஒரு துணியையும் போட்டு வெளிப்பார்வைக்கு தெரியாமல் மூடி வைத்தாள்

யட்டி இல்லாமல் ஒரு மயிராண்டியும் கிரவுண்டுக்கை தலைக்கறுப்பு காட்டக் கூடாது என்ற ரூபண்ணாவின் கட்டளைஎனக்கு  பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.

யட்டியை எப்படி வீட்டில்  கேட்பது என்று எனக்கு ஒரே சங்கடமாக இருந்தது.
எல்லாப் பொடியளும்  குட்டி மதிலில் இருந்து  வம்பளந்து கொண்டிருந்த போது நான் ரூபண்ணாவிடம் கேட்டேன்

ஏன் ரூபண்ணா யட்டி போடுறது?,போடாட்டி ஏதும் சிக்கலே...?

 
சரியாய் தயங்கி தயங்கியே,பல முறை ஒத்திகை பார்த்த பின்பே நான் இதை ரூபண்ணாவிடம் கேட்டேன்

ரூபண்ணா சிரிக்க தொடங்கி விட்டான்.அந்த சிரிப்பை அவரால்  அடக்க முடியவில்லை.மந்தகாச சிரிப்பு ,சிரிப்பின் கனம் தங்க முடியாமல் அந்த குட்டிச் சுவரில் இருந்து  ரூபண்ணா கிழே விழுந்து விட்டார்.அப்படி இருந்தும் அவரால் சிரிப்பை  அடக்க முடியவில்லை.விழுந்தவர் அப்படியே சிறிது சாய்ந்து முழங்காலில் மண்டியிட்டுக் கொண்டு சிரித்தார்  .எனக்கு போதும் போதும் என்ற அளவிற்கு கடுப்பாகி  விட்டது.
ரூபண்ணாவிடம் கேட்காமல் இருந்து இருக்கலாம் எனவும் சிந்தித்தேன் .ஆனால் இவ்வளவும் சிரித்தும் ரூபண்ணா கடைசிவரை  பதில் கூறவேயில்லை

அவமானத்தில் இனி யாருடமும் யட்டி பற்றி கேட்பது இல்லை என முடிவு செய்தேன்.
சரி கடையில் யட்டி வாங்கலாம்  என்றாலும்
ஏந்த கடையில் வாங்குவது ?

என்ன விலை வரும் ?
கடைக்காரனும் ரூபண்ணா மாதிரி   சிரிப்பானா?
சிரித்தால் என்ன செய்வது..?

என்று ஏகப்பட்ட கேள்வி எனக்குள்ளே.
இந்த இசகு பிசகான மண்டை காய்ந்த மனக்குழப்பத்தாலே விளையாட போறதையும் ,யட்டி போடுறதையும் கொஞ்சக்காலம் தள்ளிப் போட்ட படியே இருந்தேன்
ரூபண்ணா எதேச்சையாக என்னைக் ;கண்டாலே சிரிக்க தொடங்கி விடுவான்.போதாததுக்கு அவனுடைய நண்பர்கள் என்னைப் பார்த்து கொடுப்புக்குள் நக்கல் சிரிப்பு  சிரித்தார்கள்.

இதனாலேயே ரூபண்ணாவையும் அவர்கள் நண்பர்களையும் தூரத்தில் கண்டாலே நான் குதிக்கால் குண்டியில் பட ஓடி ஒளிவேன்.

ஆனால் யட்டி பற்றிய விம்பம் பிறை  நிலவு போல வளரந்து கொண்டே வந்தது.
எப்படியோ ஓரளவு பணம் சேர்த்து விட்டேன்.கைவிசேடப்பணம்.அம்மா ,மாமா மாமி என ஆட்டையைப்போட்ட பணம்  சில்லரை சில்லரையாக ஒரு நூற்றியம்பதை தாண்டும்.

யட்டி வாங்க  நூற்றியம்பது போதுமா? போதாது என்றால் என்ன செய்வது?விடிய விடிய நித்திரை பாயில் இதுதான் யோசனை

சுன்னாக  சந்தை எனக்கு அத்துப்படி எத்தனையோ  தடவை அப்பாவோடு மீன் வாங்கவும் மிளாகாய்,பூசணிக்காய் வவிற்கவும்  போய் இருக்கிறேன்.ஆனாலும் அன்று சரியான பயமாக இருந்தது.எல்லோரும் என்னையே உற்றுப்பார்க்கிற மாதிரியான உணர்வு.
உடுப்புகளை   சுன்னாக உள் சந்தையில் பரப்பி வைத்திருந்தனர் .எல்லாருடைய கடையிலும் யட்டி இருந்தது.வித வித ப்ராண்ட் ,வித விதமான வண்ணங்களுடன் 

நான் அந்த நடை பதையால் நடந்தேன்.
என்னிடம் காற்ச்சட்டை வேணுமா? சேட் வேணுமா? என கேட்டார்களே தவிர யட்டி வேணுமா என யாருமே  கேட்கவில்லை.

என்னுடைய பிரச்சனை யட்டி எடுப்பது  மட்டும் அல்ல நான் கொண்டு வந்த பணம் யட்டிக்கு போதுமா என்பதும் தான்.
 
வெட்கப்பட்டு,நாணிக் கோணி உடுப்பு விக்கிற ஒரு கிழவனிடம் யட்டி வேணும் என்று கூறினேன்.
கிழவன் எப்போதும் சிரிக்கலாம் என்ற நினைப்பில் இரண்டு கையையும் பொத்தி ஓடத்தயாரக இருந்தேன்.

ஒரு நியுஸ் பேப்பரில் சுத்தி கிழவன் தந்த பிறகுதான் யட்டியின் விலை பத்து ரூபாய் எனத் தெரிந்துகொண்டேன் .

சமீபத்தில் வேற்றுகிரகத்தில் இருந்து வந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் ஒரு குழந்தையை பற்றிய ஒரு ஆங்கில படம் பார்த்தேன்.

நானும் அப்படியே அந்த யட்டியை யாருக்கும் தெரியமால் ஒளிச்சு ஒளிச்சு வீட்டில் வைத்துப்  போடுவேன்.அதுவும் அந்த ஆங்கில பட திரிலுக்கு கொஞ்சமும் குறையாமல் இருந்தது.

மேலத்தேசத்துக்கும் பின் தங்கிய நாடுகளுக்கும் இடையில் யட்டி ஒரு அடையாளம்.


யட்டியின் தேவையை அறியும் போது மனிதனுடைய முகத்திரையை காமம் அடையாளப்படத்துகிற ஒரு சின்னம் தான்.
இப்போது எல்லாம் பண்ணிரண்டு வயது வரை நான் யட்டி போடவில்லை என நான் சொன்னால் அது கேட்பருக்கு என்னனை கேலியாக்குவது ஆகும்.
https://mail.google.com/mail/images/cleardot.gif