வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஆட்கள் செத்த தேசத்தில் ............

                                     பராசக்தியும் முன்னுரையும்
அந்த கேள்வியை யாரும் பராசக்தியிடம் கேட்கவில்லை.அப்படி பலதையும் பத்தையும் பார்த்தும் கேட்டும் பார்த்தும் தானே சனம் குந்தி இருக்குது.விசர் பராசக்தியிட்டை இதை கேட்பதால் இன்னும் பராசக்தியின்ரை விசரை கிளருவது போல ஆகிவிடும்.
""புவனத்தின் மார்பிலை பால் குடிச்சுகொண்டு இருந்த புவனத்தின்ரை பிள்ளை என்னச்சு என்ற கேள்விதான் ?""
இந்த கேள்வியை முகாமுக்கை வந்து புவனத்தின் தாய் பாணும் ,பிஸ்கேற்றும் வேண்டிக் கொடுத்துட்டு கேட்ட போது புவனம் பாணையும் ,பிஸ்கேற்றையும் தூக்கி எறிந்து  செய்த அட்டூளியம் அன்னைக்குதான் எல்லாருக்கும் தெரியும் பராசாக்திக்கு விசர் என்று.
இல்லாட்டி பாணை யாராவது எறிவார்களா?
அதற்கு பிறகு அந்த பாணை எடுத்ததற்க்காக கந்தையண்ணாவோடு பராசக்தி சண்டை போட்டதும் கந்தையாண்ணா வெலவெலத்து போனதும் தனிக்கதை.பின்னே நெடுங்கேணியிலை 17 ம் கட்டையிலை இருபத்தியஞ்சு ஏக்கரில் வருடம் வருடம் விளைச்சலை அள்ளுகிற மனுசன் ஏதோ அநியாயமாய் போகிற பாண் என்டு கிள்ளி வாயிலை போட்டால் இப்படியா மானத்தை கெடுக்கிறது.இவள் முந்தி இயக்கத்திலை இருந்து இருக்கனும் ஆமிக்காரர் பிடிச்சு கொண்டு போய் விடுவான் எண்டு விசருக்கு நடிக்கிறாள் கந்தையாண்ணா தெளிவாக சொல்லிட்டார்.இந்த முசுப்பாத்தி இருக்கிற பொடிசுகளுக்கு போதாத?அதற்கு பிறகு கந்தையாண்ணாவை அரை ராத்தல் பாண் தேசத்துரோகி  என்றுதான்........ மறைமுகமாக அல்லது நேரடியாக கூப்பிடுவினம்
பராசக்தியிட்டை யாரும் சீண்டினால் அவளிண்டை வாயிலை வார வார்த்தை  டேய் நீங்க சோதி போல தொடை பிரிஞ்சுதான் கிடப்பிங்க,
பரமு போல கருகி கிடப்பிங்க , முகுந்தன் போல மண்டை பிரிஞ்சு கிடப்பிங்க  என்று ஒரே சாபம்.முகாமிலை உள்ள எல்லோருக்கும் ஒரே சிரிப்பாய் சிரிக்கும்.
                     பராசக்தியும் முதல் உரையும் 
 பராசக்தியின் ஒரு கை சைக்கிளின் முன் காண்டிலையும் மற்ற கை சைக்கிள் சீற்றையும் பிடித்து தள்ளியபடி ஒரு ரிமோல் கண்டோலின் இயக்கத்தின் இயங்குவது போல இயங்கினாள்
பராசக்திக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது புவனம்படுத்தகிடந்ததோரனையும் புவனத்தின் பிள்ளை  புவனத்தின் மார்பை கடிச்சு கொண்டு படுத்ததையும் இதையயல்லாத்தையும் விட சிவலையின்ரை பருத்த பெரிய தொடை புவனத்தின்ரை கழுத்தை ஒட்டி கிடந்தது. அந்த புவனத்தின் பிள்ளை கொஞ்சம் தலை திருப்பி பாரசக்தியை பார்த்து சிரித்துவிட்டு வீள் என கத்தியது... உன்ரை அம்மா சவுதியில் இருந்து குழுக்கி  கொண்டு திரிஞ்ச .... யேய் பிள்ளைக்கு பாலை கொடடி....
புவனாவின் பிள்ளை இன்னும் அதிகமாக சிணுங்கி குழுங்கி அழுதது
தன்ரை பிள்ளையை திரும்பி பார்த்தாள்.பராசக்தியின்  மகன் சைக்கிள் கெரியரிள் நான்கு தடி செங்குத்தாக வைச்சு நடுவில் பிள்ளையை இருத்தி இரண்டு பக்கமும் தலையணி வைத்து வதராணி கிழையின் தண்டினால் நான்கு தடியிலும் சுற்றி கட்டியிருந்தது.
சூச்சு..சூச்சு ஊ
தண்ணீ  வேணுமா ..... குட்டிக்கு  யாரவது தண்ணீ தாருங்களேன் ...
புவனம் தண்ணீ கேட்கவும் கும்..கும் .. என இரண்டு செல் வந்து விழவும் சரியாக இருந்தது அப்படியே சைக்கிளை படுத்தி கறியறுக்கு மேலே  பராசக்தி தன்னை படுத்தினாள்.அந்த தோற்றம் ஒரு முக்கோணம் ஒன்று முறிந்து அரை வட்டம் ஆனது போல இருந்தது
வித்தியாசமான முணுகள் ஏற்கனவே கேட்டு சளித்து போன அடிவயிற்றில் இருந்து கிளம்பி உடலின் ஏதோ பகுதியால் வெளிச்செல்லும் அமுங்கிய குரல்கள் பழக்க பட்ட தோரனையில் குப்பிற படுத்தாலும் அடி வயிற்றுக்கும் நெஞ்சக்கும் இடையில் மாட்டுபட்ட குழந்தைகளின் கத்தல்கள் ...
படுத்து கொண்டு இருந்த பராசக்தி ஒரு சில நிமிடத்தின் பின் ஆ .. அடித்துட்டாங்களடா முப்பத்தியாறு யல்லும்... ,விடுங்கட ஒரு வேகத்தோடு எழும்பி கறியரில் கையை வைத்து தன் சைக்கிளின் முன் சில்லால் சனங்களை விலத்தி முன்னுக்கு போய்க் கொண்டு இருந்தாள்.தள்ளுங்கட இன்னும் ஜந்து நிமிடத்தில் இந்த இடத்தில் குண்டை கொட்ட போறன். எல்லாரையும் முண்டி அடித்து முன்னுக்கு போக போக முயற்சி  எடுத்தாள் படு தூசனங்களையும் பாவித்தாள்
ஆனல் சனம் ஆங்காங்கு விலகி கொடுத்தாலும் கீழை காயங்களோடு கிடந்தவர்கள் பராசக்தியின் வேகத்துக்கு தடையாக இருந்தார்கள்
சுந்தரண்ணையானை கோபிக்காதீங்க கழுத்துக்கு மேலாக சைக்கிளை ஏத்திக் கொண்டு பராசக்தி போனாள்...............
தொடரும் ................