புதன், 17 ஜூலை, 2013

கன்னிமார் கோயிலும் தெற்கேயும் கிழக்கேயும்              கன்னிமார் கோயிலும் தெற்கேயும் கிழக்கேயும்
*************************************************************************************
முன்னுரை


-------------------------
இது கதையல்ல  ஒரு விடுகதை  இந்த விடுகதையை   நீங்கள்   அவுக்கணும்.இந்த கதை   முழுவதும்    கேள்வியும்    பதிலும்   சந்தேகமும் தான் உலவும் .   என்றாலும் இது ஒரு கதையுடைய சேப்பிலை இருக்கிற படியால் இது கதை என்றும் சொல்லாம்
இந்த கதைக்கு முன்னுரை சரியான முக்கியம்.இந்த கதையில் மூன்று பாத்திரம் வரும்  ஒன்று  இந்தக்  கதை ஹீரோ  மற்றும் நான் அதோடு சிவாஜிகணேசன். இந்த  சிவாஜிகணேசன்  சட்சாத்  நடிகர் திலகம்  சிவாஜிக்கணேசன் தான்.
கன்னிமார்  கோயிலடியில்  முந்தி  இரண்டு  மொண்டி  இருந்தது. அதாவது ஏத்தம் . தெற்க்கு பக்கத்தால் உள்ள அந்த ஏத்தத்தில் இருந்து சைக்கிளில் இறங்கினால் சைக்கிளை மிதிக்கமாமல்
முதலாவது ரைட்டம் கை பக்கம் குஞ்சக்கா வீடு இனி சுசியுடைய வீடு என நினைக்கிறேன்.
அடுத்து   சுந்தரக்கா    வீடு இனி   விசியுடைய வீடுதான்
அதே நேரம்  லைவ்றம் கை   சுந்தரண்ணா   வீடு இனி அது யாருக்கு எனத் தெரியாது
அடுத்து ரைட்டம் கை புவனமக்கா வீடு அது இப்ப தேவியக்கா வீடு என நினைக்கிறேன்
அடுத்து  குஞ்சு பெரியம்மா  வீடு அது  விக்கண்ணாவுக்கு  தான்
அடுத்து கணேசு மாமா வீடு இனி யாருக்கு அந்த வீடு எனத் தெரியாது. சரியாக கணேசு மாமா வீட்டோடு  இறக்கம் முடிகிறது .இந்த இடத்தில் இருந்து சைக்கிள் மிதிக்க வேண்டும்.
அடுத்து   மாம்பழக்கா   வீடு அது  இனி   லதாக்கவுக்கு  தான்
அடுத்து  சிவலிங்கண்ணா  வீடு இனி  யாருக்கு  என்பதில்  எனக்கு  பெரிய  டவுட்டு
அப்படியே  போய்கொண்டு  இருந்தால்  தோட்டக்காணிதான்
பிறகு விக்கியக்கா வீடு லைவ்றம் பக்கம் வரும் அந்த வீடு இனி யாருக்கு என எனக்கு தெரியாது ஏன் என்றால் அவையளுக்கு எத்தனை பிள்ளைகள் என எனக்குத் தெரியாது அதை விட முக்கிய பிரச்சனை அந்த வீடு சும்மாச்சும் யாருக்கு என நான் சொன்னால் அந்த வீட்டு சொந்தக்காரர் துரைராச அண்ணா என்னை நக்கல் அடித்தே கொன்று விடுவார்.அவர் வாயைத்திறந்தால் ஒரு பகிடி அடிப்பார். உண்மையாக  அவர் இன்றைக்கு சனிக்கிழமை என்று சொன்னாலே சிரிப்பு வார  மாதிரித்தான்  சொல்லுவார்.

அடுத்து  ரைட்டம்  பக்கம்  நம்பியுடைய  வீடு  என  நினைக்கிறேன்
என்னுடைய கதாநாயகன்   நான் சொன்ன பாதையால் போவர் அப்டியே போனால் ஒரு  கிரவுணட்  வரும்  இந்த  கிரவுண்டை  முடிப்பது  லைவ்ற் ரைட்டாக இரண்டு வீடு அங்கேதான் கசிப்பு சாரயம் குடிசைத் தொழிழாக செய்கினம.; இதில் இருந்து கதை ஆரம்பிக்கறது. ஆனால் கதைக்கு முன்னாலும் ஒரு தகவல் கன்னிமார் மொண்டியில் இருந்து கிழக்கு பக்கத்தால் உள்ள இறக்கத்தால் இறங்கினால் சரியாக ரைட்டம் பக்கம் உள்ள திரவிய சித்தி வீடு தாண்டி கணேசு மாமாவின் வீட்டின் கேற்று வரை சைக்கிளை உழக்கமால் போகலாம். கணேசு மாமா இப்படியாக இரண்டு வீட்டையும் இறக்கத்தின் முடிவில் கட்டி இருந்தது ஏதோ தற்சயலாக நடந்தது மட்டுமே அன்றி வாஸ்த்து பார்த்து கட்டவில்லை. ஆனால்  இதை  என்னால்  உறுதியாவும் சொல்ல முடியாது.

                                                ஹீரோ
                                  --------------------------
இது  ஹீரோவுடைய  கதையாக  இருந்தாலும்  இங்கேதான் ஒரு பெரிய விடுகதை ஒளிச்சு இருக்கு.இதை நீங்கள் கவனமாக படித்தால் மட்டுமே அந்த விடுகதை அவிழும்                                 
ஹீரோ இப்ப அந்த கசிப்பு சாரய குடிசைத் தொழிலாளியிடம் ஒரு கால் வேண்டி அடிக்கிறார்.ஒரு போத்தல் புல்லாக வேண்டி சைக்கிளில் இதற்க்கு என கொண்டு போன ஒரு வார் நாரினால் பின்னப்பட்ட பையுக்குள் வைத்துக்கொண்டு  சைக்கிளை மிதித்த படி  ஏற்க்கனவே நான் சொன்ன பாதையால் வாரார்
அவர் யோசிக்கிறார் நைற்றுக்கு ஒரு பாதி அடிக்கலாம் நாளைக்கு விடிய தொடக்கம் பின்னேரம் ஜந்து மணிவரை ஒரு பாதி அடிக்கலாம்.பின்னேரம் ஒரு ஜந்து மணிக்கு திரும்ப நான் சொன்ன பாதையால் வந்தால் திரும்ப ஒண்டு வேண்டலாம்.
கால் அடித்த படியால் வெறி ஏறக்கும் முன்னால் அவர் வீட்டை போகணும். ஏணென்டால் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் கட்டன் ரைட்டாக  சொல்லியிருக்கினம்
எவ்வளத்தையும் குடியுங்கள் அப்பா அனால் உந்த றோட்லை குடிச்சுட்டு அலம்புறது.விழுகிறது அதுகள் இருக்க கூடாது.அதனாலை வீட்டை இருந்தே குடியுங்களஎன்று
இஞ்சை பாரு பிள்ளை உவ்வளவு நாளும் குடிக்கிறேன் ஆனால் உந்த ஊத்தைக் குடிகிறார் போல நான் நடந்ததை நீ பார்தனியே? என கேட்டார் 
முந்தி முன்னாலை நின்று கதைக்க மாட்டினம் இப்ப வெளிநாடு போய் எனக்கு சட்டம் வைக்கினம் என மனசுக்குள்ளே நினைச்சுக் கொண்டார்.

இப்ப அவர் தான் வளரக்கிற ஆட்டுக்கிடாவுக்கு குழை வெட்டுகிறார்.  நாளு ஆட்டுக்கிடா வளர்க்கிறார்..
வீட்டை வாரார். முதலாவது கிடாவுக்கு குழை போடணும்.நாலு வாழை இலை வெட்டி அந்த குழையோடு சேர்த்து கட்டிப்போடுற எண்ணத்தில் அவர் தன்ரை வாழைத் தோட்டத்துக்குள்ளே போறார்.
இது  ஒவ்வொரு நாளும் நடக்கிற சம்பவம் தான்.
இங்கே தான் பெரிய சதியும் இந்த பெரிய விடுகதைக்கான சம்பவங்களும் நடக்கிறது.உன்னிப்பாக வாசிக்க முடியாத சந்தர்பத்தில் அந்த விடுகதை எந்த கொம்பானலும் அவிழ்க்க முடியாது.

இப்ப அவர்  குழை வெட்ட போன நேரத்திலை

அவற்றை மனிசியும் ஒரு பிள்ளையும் விறு விறு என
ஓடிப்போய் அந்த சாரயப் போத்தலை எடுத்து
 பாதி சாரயத்தை இன்னொரு போத்தலில் விட்டுவிட்டு
 அவருடைய சாரயப் போத்தலில் அவர் கொண்டு வந்த கணக்கிலே இம்மியளவும் குறையாமல் தண்ணியை  ஊத்தி விட்டு
 பாதி சாரயத்தை மறைச்சு வைச்சு விட்டினம்.
இது வருடம் பூராய் நடக்கிற ஒன்று தான்.

இப்ப என்ரை கதாநாயகன் நடந்து வாரார் எந்த சூதும் தெரியாமல் நடந்த சதியும் தெரியாமல் கிட்டதட்ட ஒரு அப்பாவி நடந்து வாரார்.
இப்ப அந்த சாரயத்தை எடுத்து அதில் பாதித் சாரயத்தை சரியாக கஸ்டப்பட்டு
இன்னொரு சாரயப் போத்தலில் பாதியை விட்டு
மிச்ச பாதிச் சாரயத்திலை பாதித் தண்ணியை உற்றி மிக்ஸ் பண்ணி ஒரு போத்தல் சாரயம் ஆக்கிவிட்டு
குடிக்கிறார்.
அந்த போத்தல் சாரயம் முடியிற தருணத்தில் அவர் தனக்கு வெறிக்கிற மாதிரி உணருகிறார் .

இப்ப கேள்வி இது தான்
ஒரு போத்தல் சாரயத்தில் எத்தனை போத்தல் தண்ணீர் மிக்ஸ் பண்ணப்பட்டது.
இந்த கதை இதோடு முடிந்து இருந்தால் இந்த விடுகதை உங்களுக்க ஈசியாக இருந்து இருக்கும்
ஆனால் என்னுடைய கதையின் ஹீரோக்கு சதி அதிகம் ஆன படியால் கதையின் நீளமும் அதிகம் அகிறது.கேள்வியும்  சிக்கலாகிறது.
காலமை  அவர்  பழம்சோறு  சாப்பிடும் போது அவருடய மனைவி சொல்றுற
இஞ்சேப்பா கொஞ்ச வெளிநாட்டு சாரயம் ஒருத்தர் விக்கிறாராம் நீங்கள் வேண்டப்போறிங்களாஎன 
அவருக்கு நாக்கு  தொங்கப்போய்  விட்டது
அதை வேண்ட வேண்டியது தானே அப்பா என்று ஒரு இழிப்பு இழிக்கிறார்
சரி பார்ப்போம் என அவா போய் விடுறார
இப்ப தன்ரை சுறுட்டுக் கொட்டிலுக்கு போற அவர் சரியாய் ஒரு மணித்தியாலத்தில் வந்து  ஒண்டுமே தெரியதாவர் போல கேட்கிறார்
அந்த வெளிநாட்டு சாரயம் என்ன ஆச்சு அப்பா என
சும்மா தாரங்களோ ? அவையள் வித்த எட்டு போத்தலையும் ஒருத்தருக்குத்தான் கொடுப்பினம் இப்ப  எட்டாயிறத்துக்கு எங்கே போறது எனக் கேட்கிறார்.
வெளிநாட்டுச் சாரயம் எட்டாயிரத்துக்கும் நஸ்டம் இல்லைத்தானே என சொன்னவர் உள்ளே போய் எட்டாயிரத்தை கொண்டு வந்து கொடுக்கிறார்.பிள்ளை மூன்று மாசத்துக்கு ஒருமுறை எண்பது ஆயிரம் அனுப்பும் போது தனக்கு இருபது ஆயிரம் என்பது இங்கே எழுதாத சட்டம்.
மனிசிட்டை காசு இருக்கும் ஆனால்  அவள் ஒரு சதம் ஈய மாட்டாள் பிள்ளையள் வெளிநாட்டுக்கு போனல் பிறகு அவளுக்கு சரியான கெப்பர்.
இதோடு என்னுடைய ஹீரோ கதை முடிகிறது.உண்மையாக இதோடு கதையும் முடியணும் அனால் விடுகதை  முழுக்க முடியணும்.
இந்த வெளிநாட்டுச் சாரயம் செய்யுறது அவருடைய மனிசிக்கு பெரிய வேலை இல்லை

 வெளிநாட்டுச் சாரயம் சமயல் குறிப்பு
*******************************************************

கொஞ்சம் தேயிலை சாயம் எடுப்பது.
கால்கிலோ சீனி எடுப்பது
இந்த  சீனியை நல்லாய் கருக்கும் வரை  அடுப்பில்  வதக்குவது
கருகிய சீனியை தேயிலை சாயத்தில் கரைப்பது
அப்புறம் உண்மையான வெளிநாட்டுச்சாரயம் அரைப்போத்தலை எடுப்பது
ஏற்கனவே ஒருகிழமையாக களவாக எடுத்து வைச்ச குடிசைத் தொழில் சாரயமான  கசிப்பை
மூன்றைறை  லீற்றரை சரிக்கு  சமன் தண்ணீர்  ஊத்தி ஏழு லீற்றர் ஆக்குவது.
அதோடு கருகிய சீனியோடு மிக்ஸ் பண்ணிண தேயிலை சாயத்தோடு வெளிநாட்டுச்சாரயத்தை மிக்ஸ் பண்ணி அதோடு களவெடுத்த கசிப்பை மிக்ஸ் பண்ணினால்
சரியாக எட்டுப் போத்தல் வெளிநாட்டுச்சாரயம் உருவாகி விடும்.
மூடியெல்லாம் ஒரிஜினலாக  அவர்கள் போடுவார்கள் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படத தேவை இல்லை.
இப்ப என்னுடைய ஹீரோ இந்த வெளிநாட்டு சாரயத்ததை தனிய  குடித்தால்  மப்பு தலைக் கேறி   விடும்  என்ற  பயத்தில்
ஓவ்வொரு பாதிக்கிளாஸ் வெளிநாட்டுச் சாரயத்துக்கும் பாதிக்கிளாஸ் தண்ணி ஊற்றி குடிக்கிறார்.
வெள்ளைக்காரன் சாரயம் வெள்ளைக்காரன் சாரயம் தான் என மனசுக்குள்ளே நினைக்கிறார்

இப்ப கேள்வி இது தான்
ஒரு போத்தல் குடிசைத் தொழில் சாரயத்துக்குள் எத்தனை போத்தல் தண்ணிர் மிக்ஸ் பண்ணப் படுகிறது.
-
-
-
-
-

இந்த கதையில் சிவாஜி கணேசன்  எங்கே வாரார் என நினைக்கலாம் மற்றது நான் எங்கே என நினைக்கலாம்.ஒரு சிறு கதை ஒரு இடத்தில் முடியாது இந்த கதையின் அடுத்த பகுதியில் நானும் சிவாஜி கணேசன் உள்ளே வருவோம்.ஆனால் இப்போதைக்கு இந்த கதையின் விடுகதை சம்பந்தமான பகுதி முடிந்து விட்டது.