வெள்ளி, 5 ஜூலை, 2013

பஞ்சம்



                                                                பஞ்சம் 


பஞ்ச காலம் என்ற காலம் சிறிமாவோ காலத்தில் இருந்ததாக சொன்னார்கள் எனக்கு அது தெரியாது. பாணுக்கா நின்ற வரிசை என்றும் சொல்வார்கள்.சீனிக்காக இன்னும் நீண்ட வரிசை என்றும் சொல்வார்கள்.அதுவும் தெரியாது. ஆனால் நீண்ட பஞ்ச காலம் எனக்குத் தெரியும்.
                               
அது பீற்றுட்டில்  சம்பல்   பீற்றுட்டில் கறி   மற்றது    பீற்றுட்டில வறை என இருந்தது.   பீற்றுட்டு கறி எப்பவும் அதிகம்    கோப்பையில்   இருக்கும் .சோறு கொஞ்சம்    இருக்கும் .அது பீற்றுட்   சாப்பிட்டலே வயிறு  ஊதி விடும்.  அந்த பீற்றுட்   சாப்பாடு  ஒரு    15   நாளாக இருக்கும் .

ஒரு     நாளைக்கு    பிற்றுட்    வேண்டாம்   என்று    சரியாய்    சத்தம்    போட்டு அழுதால்   அடுத்த   நாள்  மரவள்ளிகிழங்கு   அவியல்   தொட்டுக்க மரவள்ளி கிழங்கு சம்பல் என அம்மா   செய்து தருவார்.அது   ஒரு   வித்தியசான   ரேஸ்டாக இருக்கும் .

அனால்   இந்த   மரவள்ளிக்கிழங்கு    சாப்பாட்டில்   ஒரு   சிக்கல்   அது   சோறு இருக்காது.   அது   ஒரு    பெரிய   விசயமாக    இருக்காது   ஏன்   என்றால் மரவள்ளிக்கிழங்கை   ஓடி   ஓடி  சாப்பிடலாம்  படுத்துக்கொண்டு  சாப்பிடலாம் அண்ணந்து  முகட்டை பார்த்துக்கொண்டு சாப்பிடலாம்.என்றாலும்  திரும்ப  அதே மரவள்ளிககிழங்கு   சாப்பாடு    தொடரந்து    ஒரு 15 நாளுக்க    சாப்பிட்டால்  அதிலை ஒரு   பெரிய     வெறுப்புத்தான்   வரும். பேந்து ஒரு   கலம்பகம்   செய்து புரட்சி   மரவெள்ளிகிழங்குக்கு    எதிராக வெடித்த   பிறகு  உணவு   முறை மாறும்.

சில   வேளை    வீட்டிலை   எந்த சாப்படும்   இருக்காது    அம்மா    வீட்டை   படுத்து  இருப்ப   நான்    விளையாடி   விட்டு    ஓடி   வந்து   அம்மா   சமைச்சுட்டாவோ   என பார்த்து   பார்த்து   ஒரு   சமயத்தில்   அழத்   தொடங்கி   விடுவேன்.  அம்மா விறு விறு என எங்கேயாவது போய்விட்டு வரும் போது மடியிலை எதாவது கட்டி வருவா..
அது    பெரும்பாலும்    முசுட்டை    இலை   அல்லது   கொவ்வை   இலை அதோடு தொய்யல் கீரை..அதை வைச்சு   காய்ச்சி   பக்கத்தில்   ராணி மாமி   உடைய புளியம் மரம் இருக்கும் அந்த புளியம் மரத்தில் சில பிஞ்சு புளியங்காயை போட்டு ஏதோ ஒரு உணவு செய்து தருவார் அது கூல் போலவும் இருக்கும் கஞ்சி போலவும் இருக்கும்

மற்றது   குரக்கன் புட்டு .  குரக்கன்   வேண்டி   திரிச்சால்   ஒரு   பெரிய   பிரச்சனை காலைமை குரக்கன்   மா  களி     மத்தியானம் குரக்கன்  மா   புட்டு   இரவு குரக்கன் மா ரொட்டி   என முன்று   அயிட்டம் மாறி மாறி வரும் அதானால அது கொஞ்சம் வித்தியாசமான சாப்பாடு போல தோணும் ஆனாலும் ஒரு மாதத்துக்கு தாக்கு பிடிக்க முடியாது.திரும்ப அரிசி சோறுக்கு ஏங்க தொடங்கி அழத் தொடங்கி விடுவோம்.

அம்மா    உடனே   போய்   அருந்தவம்   அக்காவின்    மில்லில் உடைச்ச அரிசி வேண்டி வந்து சமைத்து தருவாஅது கொஞ்சம்   கய்ச்சல் தனமாக இருக்கும் என்றாலும்    அரிசிசோறு    என்ற   ஆசையில்   ஒரு கோழியும் பிடித்து அம்மா காய்ச்சி தருவா

பஞ்சம்   என்றாலே   குறை   இல்லை   அது வெளியே    தெரியாமல்   இருப்பது  தான்   சரியான   முக்கியம்   என   அம்மா    நினைப்பா   யாரவது கேட்டால்சோறும் மீன் கறியும் சாப்பிட்தாக சொல்ல சொல்லுவா”.  ஆனால் நாங்கள் பெரம்பாலும் முசுட்டை இலையும் கொவ்வை இலையும் பிஞ்சு புளியங்காய் கூடிய   பெயர் தெரியாத   பாதர்த்தை தான்    குடிச்சு இருப்போம்.

வெளியே    போகும்   போது    இரண்டு   கல்லை   உரஞ்சி   தில் வார   பவுடரை அம்மா எனக்கு   பூசிக்கொண்டு   போவார். யாரவது   சாப்பாடு   கேட்டால் தனக்கு வேண்டாம் அவனுக்கு கொஞ்சமாக   கொடுங்கங்கள்   இப்ப தான்   சாப்பிட்டு வந்தவன்  என்று சொல்லுவா   நான்  சாப்பிட்டு கொண்டு அம்மாவை பார்ப்பேன்.அம்மா கண் காட்டுற ரைமில் சாப்பிட முடியாதவன் போல மிச்சம் இருக்கிற சாப்பாட்டையும் சாப்பிடுவேன்.

ஊரிலை   எப்பவும்   சனிக்கு   சனி   ஆடு   அடிப்பாங்கள்   அம்மா   சனி   எல்லாம் என்னை   வெளியே   விட   மாட்டார்.  எங்கேயாவது   போய் நான் சாப்பாட்டை வாய் பார்த்துக் கொண்டு இருப்பேன்….

 அதற்க்கு   பிறகு   நான்   வளர   வளர   அம்மா   கண்ட   பிடித்த   ஐடியா தான மாட்டுறச்சி . கொலனிக்கு போய்  கால் கிலோ மாட்டு இறைச்சி வாங்கி வந்து சமைத்து  தருவார்  யாரவது  கேட்டால்  ஆட்டு இறைச்சி  என்று சொல்ல சொல்லுவார். எங்க   ஆட்களில்   யாரும்   மாட்டு    இறைச்சி   அப்ப   சாப்பிடுவதே   இல்லை   யாரவது நாங்கள்   சமைக்கிறது   என்று தெரிஞ்ச எங்கள் வீட்டை யாரும் பச்சைத் தண்ணியே குடிக்க மாட்டார்கள்.முக்கியமாக அம்மாவின் அம்மா (ஆச்சி)வீட்டை வர மாட்டார் என்று அம்மா பயப்பிட்டார்.ஆனாலும் இறைச்சியில் இருக்கும் என் தீராத ஆசையும் ,கெடுவும் அம்மாவை அந்த வேலையை செய்ய  தூண்டியது.


ஏங்கள்  வறுமை  யாருக்கும் வெளியே தெரியகூடது  என்பதில் அம்மா  மிக கவனமாக இருந்தார்.ஒரு மூன்று நாள் எந்த சாப்பாடும் எங்கள் வீட்டை இல்லை.அது ஒரு மழைக்காலம்.எனக்கு  ஒரே பசி  நான் அழுது கொண்டே இருந்தேன்.  வீடு கூட சரியான   ஒழுக்கு அம்மா   எங்களை   வெளியே போகமல் கட்டிப்பிடிச்சுகொண்டு   படுத்திருந்தார்.  ஒரு இரவு   எட்ட மணி போல மருந்து குடிச்சு  சாவோமா என அம்மா கேட்டார்.அம்மா அப்படி நேரடியாக கேட்க வில்லை

அப்பாவிட்டை   போவோமா   எனத்தான் கேட்டார் நான் ஓம் என்ற சொல்லி விட்டேன்.அண்ணா அழத் தொடங்கி விட்டான்.  அம்மா   அவனை   இறுக்கி பிடித்து அழுதா.. அண்ணா கக்காவுக்கு   போட்டு வாரேன் என்று வெளியெ ஓடிப்போய்
குணமத்தணுக்கும்,நாதன்மாமாவுக்கும் ஏதோ சொல்லி கூட்டிக்கொண்டு வந்தார்
நாதன் மாமாவும்  குணமத்தாணும்  வந்து அம்மாவை கண்ட படி ஏசிப்போட்டு நிறைய அரிசியும் ,வேற   நிறைய சாமனும் வேண்டித் தந்தார்கள்.

நாதன் மாமா அதற்க்கு பிறகு மல்லி கடைக்கு கூட்டிக்கொண்டு எப்ப என்றாலும் எவ்வளவு என்றாலும் அம்மாவுக்கு கடன் கொடுக்க சொல்லி சொன்னார் தான் அந்த காசு தாரேன் என்று சொன்னார்.
               
அதற்க்கு பிறகு குணமத்தாணும் ஐம்மி அக்காவும் நாங்கள் ஒரு நிலைக்கு வரும் வரைக்கும் மாதம் மாதம் ஏதாவது உதவி பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.

உண்மையாக எந்த பஞ்சத்திலும் அம்மா என்னை ஒரு  ராஜா  போலவே வளர்த்தார்

இப்ப சென்னை முழுக்க நான் அலைகிறேன்.ஒரு முசுட்டை  இலை  ஒரு கொவ்வை    மரம்   புளியம்   மரம் எதுவுமே   இல்லை.தப்பித் தவறி சென்னைப்பக்கம் எல்லாம் ஏதாவது பஞ்சம் வந்தால் நிச்சயாமாக கொத்த கொத்தாக மக்கள் சாவது நிட்சயம்.

1 கருத்து:

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்