வெள்ளி, 12 ஜூலை, 2013

மலேசிய பொலிஸ்

மலேசிய பொலிஸ்

உலகிலே எந்த பொலிஸ்சுட்டையும் பிடிபடுங்கள்.மலேசிய பொலிசிடம் மட்டும் பிடிபடதீர்கள்.அவர்களுடைய கழுத்துக்கு மேலே எப்பவும் சிரிப்பு இருக்காது.அவரகள் உடல் மொழியில் ஆக பெரிய நக்கல் சிரிப்பு இருக்கும்.அவர்கள் மூக்கில் விசா முடிந்தவர்களை பிடிப்பதற்க்கான வாசைன தெரிந்து
வைத்துள்ளார்கள்.அவரகள் எங்களை பிடிக்கும் போது ஒரு இந்தியன் என்றே நினைத்து பிடிப்பார்கள் நாங்கள் ஒரு சிறிலங்கன் என்ற உடன் அவர்கள் நாக்கு வெளியே தள்ளி விடும்.அவர்களை பொறுத்த மட்டில் அது ஒர லட்றரி சீட் கிடைத்த நாளாக தான் இருக்கும்.
மலேசியாவில் ஏஐ;யெண்டை பிடித்து நாங்கள் அப்பார்மென்டில் அடைபட்டு கிடந்தோம்.நான் நினைக்கிறேன் ஒரு வருடமாக நாளைக்கு அனுப்புகிறேன் நாளைக்கு அனுப்புகிறேன் என்றே ஏஐ;யெண்டு எங்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.; அந்த நாளைக்கு அனுப்புகிறோம் என்ற வார்த்தையை கேட்பதற்காகவே ஒவ்வொரு நாளும் ஒரு வெள்ளி போட்டு ஏஐ;யெண்டுக்கு போன் பண்ணுவோம்.எத்தனை தடவை எடுத்தாலும் யார் எடுக்கறாங்கள் என ஏஐ;யெண்டுக்கு கன்வியுஸ்…பெயர் ? ஊர் ?எந்த இடம்போறிங்கள்? எப்ப வந்திங்கள்? எந்த அப்பார் மெண்டில் இருக்கிறிங்கள்? என கேட்டு விட்டு கடைசியாக அவர் தன் அருமையான வார்த்தையை சொல்லுவார்.
“எல்லாம் ரெடியாகி விட்டது நாளைக்கு நீ வெளிக்கிடுறாய் நான் போன் பண்ணிணவுடன் ரெடியாகு” என்று.
அந்த உரையாடலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்ற இறக்கங்களில் கூட மாற்றம் இல்லாமல் அதே தொணியில் அவர் சொல்வார்.எனக்கு சரியாக 400 நாட்கள் அதை சொன்னார்.
அவர் உரையாடலை கேட்ட பிறகு எமக்கான நாட்டை அவர் ரெடி பண்ணுறார் என்ற நம்பிக்கையில் நாங்கள் தூங்க போவோம்.
மாதத்தில் ஒரு நாள் அவருடைய சப் ஒரு கள்வன் போல எங்கள் அப்பார்மெண்டுக்கு வருவார்.ஒரு மூடை உருளைக்கிழங்கும்.ஒரு மூடை அரிசியும் 25 கிலோ வெங்காய மூடையும் தந்து விட்டு போவர்.
ஆதை நாங்கள் ஒரு மாதத்துக்கு பாவிக்க வேணும் எதாவது ஒருநாள் இரண்டு நாள் அதிகம் அரிசியை போட்டால் மாத கடைசியில் பட்டிணி கிடக்க வேண்டி வரும்.
நான் உருளைகிழங்கும் வெங்காயமும் சோறும் சரியாக 375 நாள் சாப்பிட்டேன்.இப்பவும் உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் வைத்து எனக்கு இருவது வகை உணவு சமைக்க தெரியும்.
சில வேளை அரிசியில் கறியும் உருளைக்கிழங்கை மசித்து சோறு போலவும் சாப்பிட்டு இருக்கிறோம்.
எப்பவும் கையில் கொஞ்ச காசு இருக்கும்.ஆனால் வெளியே போய் சாப்பிட விசா இல்லை.சில வேளை வெளியே யாரவது போய் வரவில்லை என்றால் நாங்கள் ஏஐ;யெண்டுக்கு போன் பண்ணணும்.அவர் என்ன வேலை இருந்தாலும் எங்களுக்கு இருக்க ஒரு அப்பார்மெண்ட் பார்த்து வைப்பார்.உடனே அவசரம் அவசரமாக ஒரு வான் பிடித்து எங்களை அவர் அந்த அப்பார் மெண்ட் க்கு மாற்றி வைப்பார்.அவரைப் பொறுத்த மட்டில் நாங்கள் பொன் முட்டை இடும் வாத்து.
ஒருநாள் நாக்கு செத்துடுமோ என்ற பயத்திலே நானும் சசி என்ற நண்பணும் வெளியே சாப்பிட போனோம்.றோட்டு முழுவதும் சைனாக்காரன் நூடிசை வைத்து இழுத்துக் கொண்டு இருந்தான்.அன்று உலகின் மிகவும் அருமையான காட்சியாக எனக்கு அது பட்டது.என்றாலும் ஒரு சோறும் மீன் கறியும் சாப்பிடுவதே வாழ்வின் கொள்கையாக அன்று எமக்கு பட்டது.
பூச்சோங் இல் இருக்கிற ஒரு இந்தியன் சாப்பாட்டு கடையை என் நண்பன் எனக்கு காட்டினான் சாப்பாட்டு கடையில் போட்டிருந்த போர்டில் இருந்த சாப்பாட்டை பார்த்தே எனக்கு வாயுறியது.
சுரியாக கடையின் வாசலில் ஏற மோட்டர் சைக்கிளில் இரண்டு பொலிஸ் காரர் வந்தார்கள்.அவர்கள் சரியாக எங்கள் மணிக்கட்டை தான் பிடித்தார்கள். (தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்