வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கொன்றால் தவறு ஏது?

செல் எனறான் ஒருவன்
சொல் எனறான் ஒருவன்
கொல் எனறான் ஒருவன்
கொன்ற பின் -பின் வந்தவன்
முன்னால் இவன் புலியாகலாம்
இன்னாலும் இவன் புலி ஆகலாம்-அட
பின்னாளிலும் புலி ஆகலாம்
கொன்றால் தவறு ஏது?





செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

புத்தரின் ஒய்யார தூக்கம்

ஓலங்களின் கதறல் என் -கனவுகளை
சிதைக்கிறது
தப்பிவிட்டோம் என்று நாம் நினைக்கவில்லை 
பிணமாகத்தான் நாம் இருக்கின்றோம்
பிணம் திண்ணிகள் இன்னும் -ஓயவில்லை
எங்களை திண்பதற்கு அவர்கள் நாக்கு
புத்தரின் கையிடுக்குகளால் பரவி
கொண்டிருக்கிறது
பயமறியவில்லை……..
என் கனவுகளின் ஊடக அந்த
அலறல் சத்தங்கள்
என்னை எழுப்பி கொள்கின்றது

கடந்த கால யுத்தங்களில்
சிறு துறும்பு கூடா எடுக்காதற்க்கு
என் எச்சில் துளிகள்-என்
முகத்தை நோக்கி போகின்றது

நாங்கள் தூக்கி பிடித்த கொடிகள்
அவர்களுக்கு கோவணம் கட்ட கூட
உதவவில்லை
அவர்களின்  ஓலக்குரல்கள் என்
கனவுகளின் ஊடாக
அம்மணமாக்கி என்னை
வீதியினில் ஓட வைக்கின்றது

புத்தா
சாதரண மனிதன் என்னால் கூட
தூங்க முடியவில்லை –எனும் போது
ஓய்யாரமாக நீ தூங்கின்றாய் என்றால்
உன் சிறுநீரினால்
உன் முகத்தை கழுவுகின்றாய்
என்று அர்த்தம்




திங்கள், 23 ஆகஸ்ட், 2010