புதன், 14 மார்ச், 2012

கதைசொல்லி


                    கதைசொல்லி
இங்கே நடக்கும் சின்ன சின்ன விடயங்கள் கூட ஊரைத்தான் ஞாகப்படுத்துகின்றது.முக்கியமாக கதையாடல் அல்லது கதைசொல்லி என்று இன்றைய இலக்கியத்தில்   பெரிய பெரிய வார்த்தைகளால் சொல்லப்படுவதை எங்க ஊரில் மிகச் சாதரணமாக கையள்வார்கள்.
லோகநாதன் நடராஜ (Loganathan Nadaraiah) என்று பேஸ்ப்புக்கில்  இருக்கும் அவருடைய தந்தை ஒரு கதை சொல்லி.சின்ன பையன்கள் அவரை சுற்றி எப்பவும் இருப்பார்கள்.அவர் முதலாவதாக செய்வது ஊரிலை இருக்கிற எதோ ஏதோ இலைகளை எல்லாம் கிள்ளி வந்து கூழ் காச்சுவார்.அப்பவே அவரைச் சுற்றி நாங்கள் இருந்துவிடுவோம்.அவர் உடல் முழுக்க கதைகளால் பின்னப்பட்வர் போல கதை சொல்வார்.
இளவரசன் கையில் ஒரு முடி மட்டும் கிடைத்தது.அந்த முடியை வைத்து அந்த பெண் எப்படி இருப்பாள் என்று அவன் கற்பனையில் உலாவினன்.இவன் காதல் வலியை உணர்ந்த இவன் நண்பன் அந்த நாட்டின் மிகப் பிரபல்மான சித்திரக்காரனிம் இளவரசனை அழைத்துச் சென்றான்.சித்திரக்hரன் இந்த முடியைப் பார்த்து இவள் ஓர் பேரழகி தான் ஆனால் இவளை நான் வரைய வேண்டும் என்றால் ஏதோ தேசத்தில் உள்ள இரண்டு கொம்புள்ள ஆட்டில் பால் கொண்டு வரவேண்டும்…..”என நீளும் கதை எந்த இடத்திலிம்  சலிக்காமல் நிறைய மர்ம முடிச்சுகளோடு அலையும். எந்த கதையையும் அவர் ஓரே நாளில் முடித்தது இல்லை.அது அடுத்தடுத்து சந்திப்புகளிளோ அல்லது அந்த சந்திப்பு நடைபெற பட்சத்தில் அந்த கதை முடிவற்றதாகவோ அமைந்து விடும். இவருக்கு எந்த பெரியவர்களோடும் அவர்களடைய கருத்துக்களோடும் உடன் பாடு இல்லை.நாலு வயதில் இருந்து எட்டு ஒன்பது வயதுடையவரகளோடுதான் இவர் பேசுவார்.பேசுவது என்பதை விட கதைசொல்லியாகவே வாழ்க்iயை கடத்தினார்.
 
                     
அடுத்த கதை சொல்லியாக சுருளியப்பாவை கூறலாம்.இவருடைய கதைகள் ஒரு மார்க்கமானது.
   
எடேய் உதிலை போறலே பொட்டை பார்த்தியே கழுத்திலே ஒரு மச்சம் இருக்குகட்டினால் இவளைத்தான்ட கட்டனும் காலுக்குள்ளேயே கிடப்பாளடா…”என்று ஆரம்பிச்சு எந்த மச்சம் உள்ளவங்க எந்த குணமுடையவர்கள் என்று சொல்லத் தொடங்கின நாங்கள் எல்லம் கிறங்கிப்போய் கிடப்போம்.
         
உண்மையா? பொய்யா? சரிய ?தப்பா?என்பது எல்லாம் தெரியாதுஆனல் அவர் கதை சொல்லத் தொடங்கினால் அன்டைக்கு பூர கேட்டுகொண்டே இருக்கலாம்.எப்பவுமே பாலியல் சம்பந்தமாக தான் அவர் பேச்சு இருக்கும்.
உண்மையாக சொல்லப்போனல் அவர் எங்களுக்கு சொன்ன விடங்களை இதிலே சொன்ன எந்த தாய் தகப்பனும் தன்னுடைய பிள்ளைகளை என்னுடைய சைட்டை எட்டிப்பார்க்கவே விடமாட்டார்கள்.
ஆவர் சொன்ன ஒரு மேட்டர் சமிப காலத்தில் ஒரு சினிமா படத்தில் கூட வந்தது.அதற்க்கு பிறகுதான் சுறுளியப்பா ஒரு சீனியர் என்று நாங்க ஏற்றுக்கொண்டோம்.அதவது
ஒரு பெண்ணுக்கு கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரல் கட்டை விரலை விட பெரிதாக இருந்தால் அந்த பெண்ணை எந்த ஆணாலும் அடக்க முடியாதுஎன்ற மிகப் பெரிய விசயத்தை சுறுயளியப்பா எங்களுக்கு பண்ணிரண்டு பதின்மூன்று வயதிலேயே சொல்லித் தந்துவிட்டார்.அங்க சாஸ்த்திரம் மட்டும் அல்ல பெண்களின் நடை,அவர்களின் குரல்,அவர்களின் தலை முடி நீளம் எல்லத்துக்கும் ஒரு வியக்கினம் அவர் சொல்லுவார்.நடைமுறை வாழ்க்கைiயில் ஒரு கற்பனை மாய உலகத்தில் எங்களை தவிக்க விடாமல் சகலதையும் புட்டு     புட்டு வைத்து மேலும் எங்களை குழப்பத்தில் ஆற்றிய பெருமை சுருளியப்பவை சேரும்
புராணக்கதைகளில் வேறு வேறு கிளைக்கதைகளை அறிமுகப்படுத்தியவர்களில் கிளர்க்கர் ஐயா  உடைய  பொறுப்பு மிக முக்கியமானது. இன்றை வரைக்கும் கேட்காத பல புராணக்கதைகளை கிளார்கர் ஐயா எங்களுக்கு சொல்லி இருக்கிறார்
விசத்தை சிவன் தொண்டையில் இறக்கும் போது உமாதேவி தொண்டையை பிடித்து சிவனை நீலகண்டன் ஆக்கியதும்.சிவனின் வயிற்றில் விசம் இறங்க முடியாமல் தடுத்த கோபத்தில் விசமானது உமாதேவியை பழிவாங்க மெல்ல சிவனின் தலையில் உள்ள பாம்பிடம் சென்றதாகவும்.பாம்பும் விசமும் திட்டமிட்டு சிறிதளவு விசம் உமாதேவியின் கருவறைக்கு பக்கத்தில் உறைந்து இருப்பதாகவும்..எப்ப உமாதேவி தன் வயிற்றின் மூலம் குழந்தை பெறுகின்றாளோஅன்று அந்த உதிரத்தோடு விசம் மழையாக பெய்து இந்த பூமியை அழித்து விடும் எனவும் அவர் கூறினார்.இந்த கதையை இது வரை யாரும் சொன்தாகவோ இல்லது வேறு புத்தகத்திலோ நான் கேட்கவில்லை.அதை விட முருகனும்,பிள்iயாரும் உமாதேவியரின் வயற்றில் பிறக்காத பிள்ளைகள் என்பது புராணக் குறியீடு.
நிறைய புராணக்கதைகளை புராணக் கிளைக் கதைகளை சொல்லியுள்;ளார்.அதில் பல கதைகள் நான் இதுவரை கேள்விப்hடாத கதைகளாகவே இருக்கின்றது.
கதை சொல்லிகள் கொஞ்சம் கற்பனை கலந்து சொல்வது தவிர்க்க முடியாத ஒன்று.கற்பனைக்கும் பொய்க்கும் கிட்டத்தட்ட ஆறு வித்தியாசமாவது இருக்கும்.பொய்யையே ஒரு கற்பனை மாதிரி சொல்பவரில் ஒருவரை நான் நெடுங்கேணியில் கண்டேன்.சின்னையாண்யை என்று சொல்பார்கள்
தம்பி அந்த எறுமை என்னை கலைக்குது நானும் ஓடுறேன்..ஓடுறேன் அதுவும் விடுறாதாக இல்லை.ஒரு கருத்த ஒரு பெரிய எருமை..அதுன்ரை கொம்பு இருக்கே இந்த தொடையளவு.சரியாய் கலைச்சு போனேன்.ஒரு பாலை மரத்துக்கு பாக்கத்திலே நிக்கிறேன் எருமை வந்து ஒரு முட்டு முட்டிச்சுது நான் அங்காலை பாய்ச்யசுட்டேன்.கொம்பு பாலைமரத்தை துளைச்சு அந்தபக்கம் வந்துச்சுது.இரண்டு கொம்பிலும் இரண்டு நட்டை எடுத்து பூட்டிவிட்டு நான் வந்துட்டேன்.”
முகமெல்லாம் வேர்த்து,கை எல்லாம் நடுங்கிய படி அவர் கதை சொல்லும் போது..எந்த விண்ணாதி விண்ணாலும் நீங்கள பொய் சொல்லுறிங்கள் என அவர் முகத்துக்கு நேராக மறுக்க முடியாது.அவருடைய கதை தன் வேட்டையாடலிலும்,தன் தனி மனத சாகஸங்களையும் சுற்றியே இருக்கும்.
மலேசியவில் நான் ஒரு 72 வயது முதியவரை சந்தித்தேன்.மாலை நேரங்களில் பூச்சோங் பார்கில் சதுரங்கம் விளையாடுவதை நாமிருவரும் ஒரு வழக்கமாக கொண்டிருந்தோம்.மலாய்,சைனிஸ்,தழிழ் மூன்று மொழிகள் மட்டும் அல்ல மலேசியாவின் பக்கத்து நாடுகளான பல மொழிகளை அறிந்து வைத்திருந்தார்.
அவர் தான் பழைய பிரிட்டிஸ் ராணுவ சிப்பாய் எனவும்.யாப்பனுக்கு எதிரான யுத்தத்தில் பங்கு பற்றியவராகவும் கூறினார்.அவுஸ்ரேலியாவுக்கும்,வியட்நாமுக்கும் இடையில் சிறிய பல தீவுகள் இருப்பதாகவும் இந்திய சுதந்திர வீரர்கள் பலர் அங்கே நிறைய பேர் கைதிகளாக இருந்தாகவும்..பல சித்திரவதைக்கு உட்பட்டு இறந்து விட்;டதாகவும்..இன்னும் பலர் பிஐp தீவு மற்றும் அவுஸ்ரேலியா,வியடநாம்,மலேசிய போன்ற பகுதியில் அடையாளம் மறைத்து வசிக்கிறாhர் எனவும்.பல இந்திய கைதிகள் தம் குடும்பத்துக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சின்ன குறிப்புக்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.அன்றைக்கு எனக்கு இருந்த மனநிலையில் எதையும் நான் பெரிசாக கிரகிக்க இல்லை.விளையாட்டின் முடிவில் வெற்றியோ தோல்வியோ அவர் எனக்காக ஐந்து ரிங்கிட் பணம் தருவர் அதற்காகவே அவரோடு நான் சதுரங்கம் விiயாடினேன் மேலும் அவரோடு பேச்சையும் தொடரந்தேன்.அந்த கதை சொல்லினுடைய தொடர்பு ஒரு கட்டத்தில் நின்று விட்டது. அவருக்கு சொல்லாமலே நான் இன்னொரு நாட்டுக்கு போய் விட்டேன்.அந்த காலத்தில் எம் நடை முறை வாழ்க்கையை எங்க nஐயண்டு தானே தீர்மானித்தான்
நிலையற்ற இருப்பிடமும்..நிலையற்ற மனித உறவுகளும் கொண்ட இவ் வாழ்க்கையில்
நாங்களும் ஒரு கதை சொல்லிதான்